விடுவிக்கப்பட்ட காணியை உரிமையாளர்களிடம் கையளித்தார் ஆளுநர்

படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச்சொந்தமான 21.24 ஏக்கர் காணியை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச்சொந்தமான 21.24 ஏக்கர் காணி இன்று(07) அதன் உரிமையாளரிடம் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால்வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை இன்று (07-02-2019) அதன் உரிமையாளரிடம் கையளிக்கின்ற நிகழ்வு 10.00 மணிக்;கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் ;அருமைநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது

Share:

Author: theneeweb