கடற்படையினரால் திருகோணமலையில் வெடி பொருட்கள் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து நேற்று (06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டுருந்த வெடி பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு 14 மின்சாரம் அல்லாத வெடித்தூண்டிகள், 03 நீர் ஜெல் குச்சிகள், 04 சார்ஜர்ஸ் மற்றும் 1 ½ அடி நீளம்கொன்ட வெடி நூலொன்றும் கன்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

குறித்த அனைத்து பொருட்களுகம் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதே போன்ற புல்மோடை, கொக்கிலாய் பகுதியில் மேற்கொன்ட சோதனை நடவடிக்கையின் போதும் அழுத்த குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட குண்டு பாதுக்காப்பாக இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் துண்டிக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

Share:

Author: theneeweb