திருத்தப்பட்ட சட்டத்தால் இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் புறக்கணிப்பு

இந்தியாவின் திருத்தப்பட்ட பிரஜைகள் சட்டத்தில் இலங்கையில் இருந்து சென்று இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் இந்திய லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுமார் 1 லட்சம் இலங்கை அகதிகள்  இந்தியாவில் வசிக்கின்ற நிலையில், அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அரசாங்க முகாம்களிலும் எஞ்சியோர் முகாமிற்கு வெளியிலும் வசிக்கின்றனர்.

அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

எனினும் புதிய திருத்தப்பட்ட பிஜைகள் சட்டத்தின் கீழும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதனை நியாயப்படுத்தியுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குறித்த இலங்கை அகதிகள் அனைவரும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக்கப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb