அரச சேவையை அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்

அரச சேவையை அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுவித்து கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் கோரியுள்ளது.

அந்த நிலையத்தின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கனி ஆரியவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரச சேவையை பகடைகாய்களாக எண்ணி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அண்மைய சம்பவமாக சுங்க பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கப்பட்டமை பதிவானதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகளால் அரச சேவையில் ஈடுபடும் ஏனைய அதிகாரிகள் அச்சத்துக்கு உள்ளாவதாக இலங்கை மனித உரிமை நிலையத்திற்கான பதில் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் அரச சேவை சுயாதீமான இயங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கியது.

எனினும் அந்த நம்பிக்கையை தற்போதைய அரசாங்கம் முற்றாக தகர்த்தெறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb