2018-இல் புவியின் வெப்பம் அதிகபட்ச உயர்வு

பூமியின் சராசரி வெப்பம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச அளவு இருந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையப் பிரிவு (ஜிஐஎஸ்எஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பூமியின் வெப்பநிலை, கடந்த 1951-ஆம் ஆண்டு முதல், 1980-ஆம் ஆண்டு வரை இருந்த சராசரி அளவைவிட கடந்த 2018-ஆம் ஆண்டில் 0.83 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.

அந்த ஆண்டின் வெப்பநிலை கடந்த 2016, 2017, 2015-ஆம் ஆண்டுகளை விட குறைவாகவே இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வெப்பநிலை நவீன முறையில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் அதிகம் ஆகும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

என்ஓஏஏ அமைப்பு கூறுகையில், 2018-ஆம் ஆண்டின் வெப்பநிலை, கடந்த 20-ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையைவிட 0.79 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்ததாக தெரிவித்தது.

இதுகுறித்து ஜிஐஎஸ்எஸ் அமைப்பின் இயக்குநர் கவின் ஷ்மிட் கூறுகையில், நீண்டகாலமாக உலகின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது என்றார் அவர்.
வளிமண்டலத்தில் கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் பிற வெப்பமூட்டும் வாயுக்கள் அதிகம் கலப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பருவநிலை மாறுபாடு காரணமாக பூமியின் பல்வேறு பகுதிகளில் மாறுபட்ட வெப்பநிலை காணப்படுகிறது. எனவே, பூமியின் வெப்பநிலை என்பது அனைத்து பகுதிகளின் சராசரியாகும்.

கடந்த 1880-ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அதன்படி, 2018-ஆம் ஆண்டில் பூமியின் வெப்பம் அதிகப்பட்சம் உயர்ந்திருப்பது இது 4-ஆவது முறையாகும்.

வெப்பநிலை மிகவும்  அதிகரித்த 2018-ஆம் ஆண்டில், அண்டார்டிகா பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்தது என்று நாசா தெரிவித்தது.

Share:

Author: theneeweb