ஆஸ்திரேலியாவின் சிறந்த பிரஜை விருது 2019

ஆஸ்திரேலிய தின அரச விருதுகளில் ‘ சிறந்த பிரஜை 2019 விருதினை ’,  சிட்னி வழக்குரைஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யனுக்கு கம்பலாந்து மாநகர மேயர் கிரெக் கம்மின்ஸ்  வழங்கினார்.

கம்பலாந்து மாநகரப் பிரிவில் முப்பத்தி இரண்டு புறநகர் பகுதிகளில் சுமார் இரண்டரை இலட்சம் .பேர் வசிக்கின்றனர். அவர்களிடையே இவ் விருது ஒரு தமிழர்க்குக் கிட்டியது இதுவே முதல் தடவை என்பது சிறப்பாகும்.  கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் சட்டம் மற்றும் சமூக சேவைகளை ஆற்றியதையும்  சிறந்த கல்வி மற்றும் எழுத்துப் பணி ஆகியவற்றையும்  கருத்தில் கொண்டு சிறந்த குடிமகள் என்ற வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

Share:

Author: theneeweb