மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்  உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அவரது அங்கத்துவத்தை நீக்குவதாக அந்த கட்சியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் அறிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மேல்மாகாணசபை உறுப்பினர் சண் குகரவரதன் இடை நிறுத்தம்

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும், சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் இடை நிறுத்தப்பட்டுள்ளார். சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,

Share:

Author: theneeweb

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *