நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07பேருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07பேருக்கு நீதிமன்றில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற பிரத்தியேகக் குழுவினால் இத் தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய 52 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கு தொடரப்படாததுடன் அவர்களுக்கு எதிரான தண்டனை தொடர்பில் நாடாளுமன்ற பிரத்தியேகக் குழு எதிர்வரும் தினத்தில் தீர்மானிக்கவுள்ளது.

Share:

Author: theneeweb