பலகோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பேலியகொடையில் வைத்து இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினரால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்துக்குரியவர்களினால் குறித்த கேரள கஞ்சா, சிற்றூர்தி ஒன்றில் வைத்து கொண்டுசெல்லப்பட்ட போதே கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்தியர் தமது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொக்கேய்னை கொண்டுவந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த இந்தியப் பிரஜை 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb