நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை – வி.விக்னேஸ்வரன் மறுப்பு

ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தி தொடர்பில் மறுப்புத் தெரிவித்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ. பி. ஆர். எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத்   தவிர, புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb