மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளதாவது,

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை ராஜபக்ஷ பெங்களூர் வந்தார்.

இதையறிந்த தமிழ் ஆர்வலர்களும், மே 17 இயக்கம் போன்ற அமைப்பினரும், ´கோ பேக் ராஜபக்ஷ´ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதுபற்றி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், குறிப்பிட்ட அந்த பத்திரிகை அதிபர், தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் நடந்து வருபவர்.

இலங்கை அரசு செய்த கொடுமைகளை அவரது நாளிதழ்களில் வெளியிடுவதில்லை. இப்போது, ராஜபக்ஷவை இந்திய மண்ணுக்கு அழைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb