2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது – மகிந்த ராஜபக்ச

2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது என   மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.

ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை பயன்படுத்துவதும் அவசியம்

தங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது

1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை கொலை செய்தனர்.

அது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.

1980 மற்றும் 2014 இல் இந்தியாவி;ற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.

2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன.

அரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம்.

இந்திய இலங்கை உறவுகளிற்கான    எனது பரிந்துரை இதுதான்.

ஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்.

 

2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தவேளை இலங்கை இந்தியா இணைந்து உருவாக்கி டிரொய்கா பொறிமுறை போன்ற ஒன்று எதிர்காலத்தில் அவசியம்.

அத்துடன் அரசாங்கங்கள் மாறும்போது உறவுகளில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து எப்போதும் காணப்படுவதை எங்கள் கடந்த கால அனுபவங்கள் காண்பித்துள்ளன. இலங்கைக்கு இந்தியாவின் பாதுகாப்பு எப்போதும் முக்கியமானது.

நெருக்கமான பின்னிப்பிணைந்த எங்கள் நாடுகள் தேசிய பாதுகாப்பு குறித்து உணர்வுபூர்வமாகயிருப்பது அவசியம். சர்வதேச பயங்கரவாதத்தினால் உந்தப்பட்ட பிராந்திய பயங்கரவாதம் இந்தியாவும் இலங்கையும் ஒருவரையொருவர் எவ்வாறு கருதுகின்றனர் என்பதை தீர்மானிக்கும்.

ஒருவரின் பாதுகாப்பை மற்றையவர் உறுதி செய்யவேண்டிய பரஸ்பர கடமைப்பாடு எங்களிற்கு உள்ளது. இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய சக்திகள் இலங்கையை தளமாக பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதிக்க கூடாது என இந்திய தலைவர்கள் வலியுறுத்துவதை நாங்கள் செவிமடுத்துள்ளோம்.

இதேபோன்று இந்தியாவிலிருந்து செயற்படும் குழுக்களால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை இந்தியாவிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அரசியல் ஸ்திரதன்மையே எங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளின் தன்மையை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக விளங்கும். எங்கள் நாடுகளில் இரண்டில் ஒன்றில் அரசியல் ஸ்திரதன்மையும் குழப்பநிலையும் காணப்பட்டால் வெளிவிவகார உறவுகள் முக்கியத்துவத்தை இழக்கும் என தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb