தொண்ணூறு விகிதமான மதுபானசாலைகள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை

நிஸ்தர் இட்றூஸ்—

ஜனவரி 29ந்திகதிய டெய்லி மிரர் பத்திரிகையின் இணையப் பதிப்பில் மேற்குறிப்பிட்ட தலைப்பையுடைய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.அதை வாசித்தபோது ஒருவகை எரிச்சலூட்டும் உணர்வை அல்லது தவறான உணர்வின் தன்னிச்சையான ஒரு விளைவை நான் உணர்ந்தேன், ஒருவேளை அது கசப்பான ஒரு குமட்டலாக இருக்கலாம். இந்த நாட்டில் அரசியல் என்ன நிலைக்கு வந்துள்ளது? மதுபான உரிமம் மற்றும் மதுபானசாலைகளின் உரிமை அரசியல்வாதிகளையே சுற்றிச் சுழல்கிறதா? ஆளும் நிருவாகத்தால் அமைக்கப்பட்ட மிகவும் மோசமான முன்னுதாரணம் இது.

தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இதையே செய்துவந்தன, ஆனால் நடப்பு நிருவாகத்தின் வெளிப்படையான மதப் பிரச்சாரத்தால்; எல்லாவற்றையும் சரியாக அமைக்க முடியும். சுற்றுச்சூழல் காரணிகள் அழுத்தம் கொடுக்கும்போது, ஒழுங்கற்ற விதிமுறைகளில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக கஷ்டத்தை எதிர்க்க பயனுள்ள திறமையான கொள்கைகளை வடிவமைக்க முடியும். முதலில் சரியான உதாரணத்தை அமைத்துக் கொள்ளாமல் போதைப்பொருள் அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராட நீங்கள் முயற்சிப்பதில் என்ன புத்திசாலித்தனம் உள்ளது. வார்த்தைகளைவிட காரணங்கள் அதிகம் பேசுகின்றன. சொல்லாட்சி வெறுமையானது ஆனால் செயற்பாடு கவனத்தைக் கவரக்கூடியது. தயவுசெய்து இந்த பாசாங்குத்தனத்தை நிறுத்துங்கள்.

இந்தச் செய்தி தரும் எதிர்ப்பொருள் தெளிவானதும் மற்றும் பரவலானதும் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தீமையானதும் மற்றும் போதைக்கு அடிமையாக்கும் மதுபானங்களை விற்பனை செய்வதிலும் மற்றும் வினியோகம் செய்வதிலும் சந்தேகத்துக்குரிய முறையில் தனியுரிமையைக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையான முறையில் ஸ்ரீலங்காவில் மதுபானத் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பங்களிப்புச் செய்வதற்கும் பல பரமாணங்களைக் கொண்ட முரண்பாடான குணாதிசயங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது. சாதாரணமானவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அளவுக்கு அதிகமான ஜனநாயக உணர்வுகளோடு கடினமாக உழைக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்களால் Nதுர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தின்போது அனைத்து வகையான போதைப் பொருட்களையும் வழங்கி அவர்களை நசுக்குகிறார்கள். மற்றும் வேறு சந்தர்ப்பங்களில், ஒருநாளின் கடினமான வேலைக்குப் பின்னர் அவர்களின் பலவீனமான உடற்கூறுகள் அவசியமான தூண்டுதலினால் மதுவின் தேவையை நாடும் போது அதை விலை கொடுத்து வாங்கும்படி செய்கிறார்கள் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தின் மொத்த அடிபணிவையையும் கட்டுப்படுத்தவும் மற்றும் இயக்கவும் ஜனநாயக ரீதியில் தெரிவான ஒரு சதிக்கூட்டம் வேலை செய்கிறது. மதுபானம் தொடர்பான இறப்பு தொற்றுநோயின் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் வலியுறுத்தியிருப்பது, போதைப்பொருள் குற்றம் இழைப்பவர்களுக்கு பிலிப்பைன்ஸ் உட்டபட மற்ற நாடுகளின் உதாரணங்களைப் பின்பற்றி மரணதண்டனை வழங்குவதை நடைமுறைப்படுத்தப் போவதாக. “பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருளைக் கையாள்பவர்கள் மின்சார நாற்காலியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவில் கூட போதைப் பொருளைக் கையாள்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. அதேபோலத்தான் அமெரிக்காவிலும் தண்டனை வழங்கப்படுகிறது, எனவே நானும் அதைச் செய்யப்போகிறேன்” என்று சிறிசேன தெரிவித்தார். பெரிய வார்த்தைகள்! ஆனால் உதாரணங்கள், கொள்கைகள் போன்றவற்றை நடைமுறையில் காட்டாவிட்டால் அச்சம் அல்லது ஆதரவைச் செயற்படுத்தாவிட்டால் அந்த வார்த்தைகளில் பலன் இல்லை.

சப்பிரகமுவ ஆளுனர் தம்ம திசாநாயக்காவின் கதையின்படி, அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது நாடளாவியரீதியில் திறக்கப்பட்டிருக்கும் மதுபானசாலைகளில் 90 விகிதமானவை அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்று. சீவலி மத்திய மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த திசாநாயக்கா போதைப்பொருள் தடுப்பு வாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த அதிர்ச்சி தரும் செய்தியைத் தெரிவித்தார்.போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்போது பாடசாலைச் சிறார்கள் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்கும்படி அவர்களிடம் ஆளுனர் கேட்டுக் கொண்டார்.

உயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டு மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கவேண்டிய மருத்துவத் தொழிலில் உள்ள அங்கத்தவர்கள், இந்த வன்முறைகளுக்கு பங்களிப்புச் செய்யும்போது இந்த முரண்பாடு மேலும் ஒருங்கிணைக்கப் படுகிறது. சமீபத்தில் ஒரு பெண் வைத்திய நிபுணர் பொரலஸ்கமுவவில் ஒரு விபத்துடன் தொடர்புபட்டிருந்தார், அதில் ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் கொல்லப்பட்டார், அந்தச் சமயத்தில் அந்தப் பெண் மருத்துவர், மது போதைக்கு ஆட்பட்டிருந்தார். விபத்தைத் தொடர்ந்து அந்த மருத்துவருக்கு காவல்துறையினர் மூச்சுப் பரிசோதனை நடத்தியபோது அது உண்மை என நிருபணமாகியது. அவரது இரத்த ஓட்டத்தில் 80 மில்லி கிராமுக்கு மேற்பட்ட மது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்துக்கு முன்னர் அந்த வைத்தியர் ஒரு விருந்து வைபத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அந்தக் கட்டுரையின்படி மாணவர்களில் ஒருவர் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது, அரசாங்கங்கள் ஒருபக்கம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியபடி மறுபக்கத்தில் தொடர்ந்து மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கும் மற்றும் அதை பராமரிப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு உரிமங்களை வழங்கிக் கொண்டிருப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது என்று. என்ன ஒரு புத்திசாலித்தனமான கேள்வி? இது மற்றொரு முரண்பாடு. மற்றொரு மாணவன் கேட்டிருப்பது, நாட்டின் நிறைவேற்றுனரினால் விடப்பட்ட உத்தரவுகளை அலட்சியம் செய்துவிட்டு போதைப் பொருட்களை பரப்புவதற்கு உதவுவது முக்கியமானதாக உள்ளது என்று.அவர் மேலும் கேட்டிருப்பது, இந்த அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று, இது மற்றொரு முரண்பாடு.

உலகளாவிய ஆய்வு தெரிவிப்பது,அநேகமான இளம் பருவத்தினர் மிகவும் சிறிய வயதிலேயே மது அருந்த ஆரம்பிக்கிறார்கள் என்று. தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகும் பழக்கத்தைச் சந்தித்தவர்களின் வரிசையில் 15 வயதில் குடிக்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு தெரிவிப்பது, நடுத்தர வயதில் தோன்றும் தீவிரமான குடிப்பிரச்சினை(அல்கஹோலிசம் என்று அழைக்கப்படுவது உட்பட) உண்மையில் மிகவும் முன்கூட்டியே இளம் பராயத்திலேயே அதாவது வளரும் பருவத்திலேயே அதிகமாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன என்று.

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆளுனர் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது, அரசியல்வாதிகள் மது விற்பனை செய்வதை நிறுத்தினால், 90 விகிதமான இந்த மது விற்பனைச்சாலைகளை மூடிவிட முடியும் என்று. மதுபான வியாபாரத்தில் உள்ள அரசியல் அதிகாரிகளின் நேரடி மற்றும் மறைமுக தலையீடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். “மதுவின் விளைவால் ஏற்படும் சமூக மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளை தீhப்பதற்கு ஏற்படும் செலவுடன் ஒப்பிடுகையில், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகும்.இந்தச் செலவுகள் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் ஒழுக்கச் செயற்பாடுகளில் கடுமையான குறைபாட்டை ஏற்படுத்துகிறது, அது நாட்டின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

இங்கு நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. கேவலமான இந்த முழு விவகாரம் தொடர்பாக தெளிவானதும் யதார்த்தமானதுமான ஒரு மதிப்பீடு. இப்போது பொருத்தமான, அர்த்தமுள்ள செயற்பாடு தொடருமா? இது ஒரு பில்லியன் டொலர் கேள்வி? அநேகமாக இல்லை என்பதே பதிலாகும். இது வெறுப்புணர்வு அல்லது அலட்சியம் பற்றிய ஒரு அணுகுமுறை அல்ல ஆனால் ஸ்ரீலங்கா அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு ஆழமான புரிந்துணர்வு. ஒரு தலைமுறை அழிந்து போனால்கூட இந்த கொடூரமான கொள்கைகள் தொடர்ந்து நீடிக்கும் மற்றும் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.+

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb