லண்டன்: காரல் மார்க்ஸ் கல்லறையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள்

ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவமேதை காரல் மார்க்ஸ். அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன். இதனால் மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார்.

இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை வடக்கு லண்டனில் அமைந்துள்ளது. அது நினைவுச்சின்னமாகவும், பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை அடையாளம் தெரியாதவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb