புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம்

 கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகர சபை ஊழியர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரின் கடைகள், பஸ் நிலையங்கள், வீதிகளில் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது.

அறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகர் பகுதியிலும்
வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் நகரில் இருந்து சென்ற வாகனப் பேரணி குருநாகல் வீதி, அநுராதபுரம் வீதி மற்றும் உள் வீதிகளில் சென்று மீண்டும் புத்தளம் நகரை சென்றடைந்தது.

Share:

Author: theneeweb