சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

சிலாபம் கடற்பகுதியில் இருந்து நீண்டதூர மீன் பிடி படகில் ரியூனியன் தீவுக்கு பயணித்த குறித்த நபர்கள் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நீண்டதூர மீன் பிடி படகில் 70 இலங்கையர்கள் ரியூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த குழுவில் 08 பெண்களும், 05 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் படகு சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமானது என்பதுடன், தனது அனுமதியின்றி இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share:

Author: theneeweb