ஜெர்மனி: மருத்துவம், ஆரோக்கியம், போக்குவரத்து செய்திகளின் தொகுப்பு

இன்றைய வாழ்க்கைமுறையில் நவீன வசதிகள் வந்து சேர்ந்ததால் பலர் மிகவிரைவாகவே நோயாளிகளாக மாறிவரும் நிலமை பெருகிவருவதாகத் தெரியவருகின்றது. அதாவது நீண்டநேரம் காரியாலயங்களில் இருந்து பணியாற்றுபவர்களுக்கும் நீண்டநேரம் தொலைபேசிகளோடு பொழுதைப் போக்குபவர்களுக்கும்தான் ஆபத்துக்கள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் யேர்மனியில் வருடாவருடம் சுமார் 10 லட்சம் பேர்வரை பாதிக்கப்படுகிறார்களாம். பலவித உடல் உபாதைகளுக்கும் நாரிப்பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுவலி, கண்,மூளை போன்ற உறுப்புக்களின் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். இதனால் 25வீதமான பெண்களும் 16 வீதமான ஆண்களும் பாதிக்கப்பட்டனர் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மனித உறுப்புக்களில் ஈரல், சுவாசப்பை உறுப்புக்களும் முக்கியமானவையாகும். யேர்மனியைப் பொறுத்தளவில் தற்போது 7.239 பேர் ஈரல், சுவாசப்பை நோயாளிகளாகக் காணப்படுகின்றனர். 2018ம் ஆண்டில் மட்டும் 1.670 பேருக்கு இந்த உறுப்புக்கள் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாம். இதே வேளை 2018ம் ஆண்டில் 410 பேர் இந்த உறுப்புக்களைத் தானம் செய்தனர் எனவும் சுகாதாரப் பகுதியின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இன்று எங்கு சென்றாலும் அவசரம்…அவசரம் என ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கைச் சூழலுக்குள் நாம் அகப்பட்டுப் பல கெடுதல்களுக்கு ஆளாகின்றோம். இதில் குடும்ப வாழ்வியலில் குழந்தைகள் பிறப்பதில் கூட பல கெடுதல்கள் வந்து சேருகின்றன. சாதாரணமாக ஒரு கரு உண்டாகி பிள்ளை பிறக்க 40 வாரங்கள் செல்லும் என்றிருக்க இந்த அவசர வாழ்க்கை முறையால் 37 மாதங்களில் குறைப்பிரசவங்கள் நிகழ்துள்ளதாக யேர்மனிய வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது சென்ற 2018ம் ஆண்டில் இப்படியாகப் 10 வீதமான குழந்தைகள் நிறை குறைவாக அதாவது 1.500 கிராம் அளவில்தான் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ன்று உலகில் நிலவிவரும் நோய்களில் மன அழுத்தமும் பெருகிவரும் நோயாகக் காணப்படுகின்றது. அவசர உலகம், பணஆசை, குடும்பச் சிக்கல்கள் வேலைப்பழு எனப் பிரச்சனைகள் அதிகரித்துச் செல்வதால் மனஅழுத்த நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. யேர்மனியில் இந்த மன அழுத்த நோயினால் மொத்தச்சனத் தொகையில் (82மில்லியன்) சுமார் 11.3 வீத பெண்களும் 5.1 வீத ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வருடாவருடம் இந்த நோயினால் 8 வீதம்பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது 5.3 மில்லியன் பேர் தற்போது இந்த நோயாளிகளாகக் காணப்படுகிறார்கள. இவற்றைவிட ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பெறுபவர்களிடையேயும் 17 வீதம்பேருக்கு இந்த மன அழுத்தம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

வாகனங்களின் விலை ஏற்றம், வரிகட்டுதல், போக்குவரத்து நெருக்கடி, தரிப்பிடப் பிரச்சனைகளால் யேர்மனியில் மின்சார சைக்கிள் (நு.டீமைநள) பாவனையாளர்களின் தொகை அதிகரித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் வளர்ச்சியைப் பார்த்தால்…
• 2010ம்ஆண்டில் – 1.50.000 பேர்
• 2012 “ -2.60.000 “
• 2014 “ -2.80.000 “
• 2016 “ -3.40.000 “
• 2018 “ -7.20.000 “

பறவை இனங்கள், மீன் இனங்கள், முயல் இனங்கள், பூனை இனங்கள், நாய் இனங்கள் ஏனைய வீட்டுப் பிராணிகளை வளர்ப்பதால் மனிதருக்கு மன அழுத்தம் குறைவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யேர்மனியில் இந்த உயிரினங்களை வளர்ப்போர் தொகையும் அதிகரித்து வருகின்றது. இதனால் இந்த உயிரினங்களின் உணவுகள் விற்பனையும்பல மடங்காகப்பெருகி இருக்கின்றது. அதன் புள்ளி விபரத்தைப் பார்த்தால்…
• 2012ம் ஆண்டில் -2.92 பில்லியன் யூரோவிற்கு விற்பனை
• 2014ம் “ -2.94 “ “ “
• 2016 “ -3.15 “ “ “
• 2018 “ -3.17 “ “ “

இரசாயனங்கள் கலக்கப்படாத இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்தபடியால்தான் நமது மூதோர் நோய்நொடி இல்லாமல் நூறாண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றை உலகம் இரசாயன உணவுப்பொருட்களோடு கலத்துவிட்டபடியால் நோய் நொடிகள் பலவித புதிய நோய்களைச் சந்தித்து வருகின்றது. யேர்மனியைப் பொறுத்த அளவில் இன்று பலர் இந்த இயற்கை உணவுகளை நாடிச்செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பலர் சைவர்களாகவும் உணவுகளை உண்டு யோகசனமும் செய்து நீண்ட ஆரோக்கியம் பெற்றுவருவதாகத் தெரியவருகின்றது. ஆனால் நம்மவர்கள்தான் மாமிச உணவுகளிலிருந்து விடுபடமுடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். யேர்மனியில் Bio Lebennmittelen  என்று சொல்லப்படும் இரசாயனக் கலவைகள் இல்லாத இயற்கை உணவுகளின் விற்பனை அதிகரிப்பைப் பார்ப்போம்..

2008ம் ஆண்டில் – 5.3 பில்லின் யூரோவிற்கு விற்பனை நடைபெற்றது.
2018ம் “ -10.4 “ “ “ “

 

கட்டிடப் பொருட்கள், வீட்டுத் தளபாடப் பொருட்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் என உற்பத்தி விற்பனை நிலையமான Bauhaus  என்று சொல்லப்படும் வியாபார தாபனம் யேர்மனியில் தொடங்கி 100 வருடங்களை நிறைவு செய்துள்ளது. யேர்மனி Weimar என்ற இடத்தில்தான் Walter Gropins என்பவரால்தான் 1919ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் Dessau, Berlin  நகரங்களில் தாபிக்கப்பட்டு இன்று நாடு முழுவதும் இந்த வியாபார தாபனம் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகின்றது.

 

Generated by pixel @ 2019-01-29T00:37:58.107689

யேர்மனியில் ( Autobahn ) விரைவு வீதிகள், மாகாண, கிராமிய, நகர வீதிகள் எனத் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. புதுப்புது வீதிகள் திறக்கப்பட்டாலும் சனத்தொகைப் பெருக்கத்தோடு வாகனங்களின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.2018ம் ஆண்டில் வாகனங்களின் நெருக்கடிகள் ( (Staus)  ) 7.45.000 ஏற்பட்டதாக வாகன அவசர பாதுகா நிறுவனமான  ADAC தெரிவித்துள்ளது

10-
உலகம் எவ்வளவு நவ நாகரீக, விஞ்ஞான, சமூக மாற்றம் என முன்னேறினாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துத்தான் வருகின்றது. இது மறுக்கமுடியாத உண்மையாகும். யேர்மனியைப் பொறுத்தளவிலும் இது பொருந்தும். பெண்களுக்கெதிரான வன்முறைகள் சித்திரவதைகள் கொடுமைகள் என்று பார்க்கும்போது சென்ற ஆண்டில் 1.13.965 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2016ம் ஆண்டில் 1.04.290 சம்பவங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த வன்முறைச் சப்பவங்கள் எப்படி நடைபெறுகின்றது என்பதை அவதானித்தால்..

-வாக்குவாதங்களால் தலையில் அடிபட்ட சம்பவங்கள் – 69.7மூ பேர்
-கருத்துவெறுபாடுகளால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுதலும்
கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட முரண்பாட்டுச்சம்பவங்கள் – 26.5மூ பேர்
-பாலியல் ரீதியில் ஏற்பட்ட சம்பவங்கள் – 2.5மூ பேர்
-கொலைச் சம்பவங்கள் – 1.3மூ பேர்

1

A-Plus mit Lufthansa

1-ஒரு நாள் என்பதில் உலகில் எவ்வளவு சம்பவங்கள் நடைபெறுகின்றது. உலகம் அந்த அளவிற்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 24 மணி நேரமும் விமானங்களும் உலகெல்லாம் பறந்துகொண்டே இருக்கின்றன. யேர்மனியைப் பொறுத்தளவில் மிகப்பெரியதும் ஐரோப்பாவில் மிகப்பெரியதுமான விமான நிலையம் Frankfurt விமான நிலையம் தான். இந்த நிலையத்தை எடுத்து நோக்கினால் அதாவது 24 மணி நேரத்தில் (ஒருநாள்) எப்படிப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்பதைப் பார்ப்போம்…

-1303 விமான சேவைகள் இடம்பெறுகின்றன.
-சுமார் 1.76.700 பேர் பயணிக்கின்றனர்.
-சுமார் 75.000 பயணப்பைகள்(சூட்கேஸ்) ஏற்றி இறக்கப்படுகின்றன.
-10.100 கார்கள், வேன்கள் போன்ற பிரயாண வண்டிகள் வந்து போகின்றன.
-6.100 தொன் பொதிகள் ஏற்றி இறக்கப்படுகின்றன.
-175 கடுகதி தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
-257 உள்ளூர் மற்றும் பிராந்திய தொடரூந்துச் செவைகள் இடம்பெறுகின்றன.
-500 பஸ் வண்டிச் சேவைகள் இடம்பெறுகின்றன.

12-
யேர்மனியில் உடல்நிறை அதிகரிப்பும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது. எண்ணெய், கொழுப்பு, மாப்பொருள், மற்றும் அவசர உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்த உடற்பருமன் வந்துசேருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அரசாங்கத்துக்கும் வருடாவருடம் சுகாதாரச் செலவுகளும் அதிகரிக்கின்றது. தற்போது யேர்மனியில் 40 வீதமானோர் சாதாரணமானவர்கள் அதிகமான நிறையுடையவர்கள் 30 வீதம்பேரும் மிக அதிக நிறைகூடியவர்கள் 30 வீதம்பேரும் காணப்படுகின்றனர்.

அனைத்துத் தகவல்களும் யேர்மனிய டொச், ஆங்கில சஞ்சிகைகள் பத்திரிகைகளில் பெறப்பட்வையாகும்.

வ.சிவராசா – யேர்மனி. 15-02-2019

Share:

Author: theneeweb