குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பும் கோடாவும் பொலீஸாரால் மீட்பு

கிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கான் கசிப்பும்(42 போத்தல்) பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி மாவட்ட உதவி பொலீஸ் அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்கவின் வழிகாட்டலில் கிளிநொச்சி மாவட்ட விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலீஸ் அதிகாரி சத்துரங்க தலைமையிலான உட்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இதனை மீட்டுள்ளனர்.

வாழ்வாதாரகத்திற்கு வழங்க்கப்பட்ட மீன் பிடி வள்ளம் ஒன்றை பயன்படுத்தி குளத்தின் நடுவில் மறைப்பு ஒன்றுக்குள் இச் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. சம்பவத்தின் போது குளத்திற்குள் நீதி சென்று பொலீஸார் இற்றை மீட்டுள்ளனர்.

அத்தோடு கிளிநொச்சி உதயநகர் மற்றும் கனகபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 வேப்பம் குற்றிகளும், 02 முதிரை குற்றிகளும் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் போது சந்தேகத்தில் இருவர் பொலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb