விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கை​ கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அறிக்கை சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

எனினும் சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என்று குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மே மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்குமாறும் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb