05 குறுக்குத் தெரு வீதியோர வர்த்தக நிலையங்களை உடைக்க தீர்மானம்

கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெருவில் உள்ள வீதியோர வர்த்தக நிலையங்களை உடைப்பதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமையின் காரணமாகவே இவை உடைத்து அகற்றப்பட உள்ளன.

நேற்று இரவு 10 மணியளவில் அந்த வர்த்தக நிலையங்களை உடைக்க இருந்த போதிலும், அந்த வரிப் பணத்தை செலுத்துவதற்கு இன்று காலை 10 மணி வரை காலம் வழங்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

Share:

Author: theneeweb