அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு திங்கள் கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை மறுதினம் திங்கள் கிழமை வடக்கு மாகாணத்தில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
அரசியல் கட்சிகள், பல்கலைகழ சமூகம், பொது அமைப்புக்கள் என பலதரப்பட்டவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ள போராட்டம். பின்னர் ஊர்வலமாக அங்கிருந்து கிளிநொச்சி ஏ9 வீதி வழியாக டிப்போச் சந்திவரை சென்றடைந்து அங்கு ஐநாவுக்கான மகஜரும் கையளிக்க்பபடவுள்ளது

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு,சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, யாழ் பல்லைகழக சமூகம், வர்த்தக சங்கங்கள், என பலதரப்பட்டவர்களின் ஆதரவுடன் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய கர்த்தலை அனுஷ்டிப்பதற்கு முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளனர்.

Share:

Author: theneeweb