கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்படுகிறது.

கிளிநொச்சியில் உள்ள பல திணைக்கங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வேலையற்று காணப்படும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்றனர. க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக்களம்.மத்திய சுற்றுசூழல் அதிகார சபை, மற்றும் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல திணைக்களங்களில் சாதாரன சிற்றூழியர்கள், சாரதிகள் தொடக்கம் பல பதவி நிலைகளுக்கு இவ்வாறு தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பணியிடங்களுக்கு நிரப்பட்டு வருகின்றனர்.

யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான ஒரு மாவட்டத்தில் தகுதியிருந்தும் வேலையற்று பலர் உள்ள போதும் அரசியல் நியமனங்களால் இவ்வாறு நியமிக்கப்படுவது மாவட்டத்தைச்சேர்ந்தவர்களை கவலைடையச் செய்துள்ளது. முக்கியமாக கடந்த மூன்றாண்டுகளில் இவ்வாறு அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Author: theneeweb