பெண்களுக்காக விசேட புகையிரத பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானம்

பெண்களுக்காக விசேட புகையிரத பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக புகையிரதங்களில் பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb