பாரியளவிலான ஹெரோயின் தொகையை பார்வையிட போதைப்பொருள் தடுப்பு பணியகம் சென்ற ஜனாதிபதி

இந்நாட்டு வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது, குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், காவல்துறை விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றிவளைப்புகளுக்கும் ஜனாதிபதி தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share:

Author: theneeweb