காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்..! கையெழுத்து போராட்டம் ஆரம்பம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற அடையாள போராட்டத்துடன் இந்தக் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால், நாளைய தினம் வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வடக்கு, கிழக்கில் நாளைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு மற்றும் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்ககழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb