போதைப்பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

​ போதைப்பொருளுக்கு எதிராக இன்று (24) வெலிகம பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த ஆர்ப்பாட்ட பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம அஸ்ரபா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி வெலிகம அரபா தேசிய பாடசாலையை வந்தடைந்தது.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், மதகுருமார்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share:

Author: theneeweb