வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் வட மாகாண ஆளுநரின் கோரிக்கை

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடும் பணிகள் உள்ளன.

இந்த நிலையில், காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக ஓய்வுபெற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஓய்வு பெற்ற நில அளவையாளர்கள் வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாக காணி நிர்வாக திணைக்களம், வட மாகாணம், இலக்கம் 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம் என முகவரிக்கோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 021 222 0836 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என வட மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb