மாகந்துரே மதூஸின் துப்பாக்கிதாரியான இராணுவ சிப்பாயின் வீட்டிலிருந்து இராணுவ உத்தியோகபூர்வ சீருடை மற்றும் கைவிலங்கு என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன.

டுபாயில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஸின் துப்பாக்கிதாரியான இராணுவ சிப்பாயின் வீட்டிலிருந்து இராணுவ உத்தியோகபூர்வ சீருடை மற்றும் கைவிலங்கு என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைவிலங்கு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் 700 கோடி ரூபா மாணிக்கக்கல் மற்றும் வைரக்கல் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது கம்புறுப்பிட்டிய வீட்டிலிருந்த இராணுவ சிப்பாயின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர், கடந்த நொவம்பர் மாதம் 4 ஆம் திகதி ஹக்மன கெபிலியபொல பிரதேசத்தில் ஸ்ரீ ங்கா பொதுஜன முன்னணியின் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் எல்.எச் சாந்தவை துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகத்துக்குரியவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

Share:

Author: theneeweb