சங்குபிட்டியில் 22 வயதுடைய இளைஞர் பரிதாபமாக பலி.

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் அதிக வேகத்துடன் சென்ற உந்துருளி ஒன்று வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் கல் ஒன்றுடன் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 வயதுடைய இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb