ஆஸ்கர் விருதுகள் 2019: இந்திய பெண் குறித்த ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா டால்பின் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டதில் முதலில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை “இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்” படத்திற்காக ரெஜினா கிங் பெற்றுக்கொண்டார்.

இதில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஃபிரீ சோலோ(FreeSolo)’ படத்திற்காக எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனைக்கான விருது: ‘வைஸ்’ படத்திற்காக அதில் பணியாற்றிய கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது:  ‘பிளாக் பேந்தர்’ படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. அதே படம் தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றது.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது: ‘ரோமா’ படத்திற்காக அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: ‘போகிமியான் ரஃப்சோடி’ படத்திற்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது: ‘போகிமியான் ரஃப்சோடி’ படத்திற்காக ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது: மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ படத்திற்காக அதன் இயக்குனர் அல்போன்சோ கியுரான் பெற்றுக் கொண்டார்.

சிறந்த ஒலி கலவைக்கான விருது: ”போகிமியான் ரஃப்சோடி” படத்திற்காக பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: அல்போன்சோ கியுரானுக்கு ரோமா படத்திற்காக பெற்றார்

சிறந்த படத்தொகுப்புக்கான விருது:  ‘போகிமியான் ரஃப்சோடி’ படத்திற்காக ஜான் ஓட்மேனுக்கு வழங்கப்பட்டது.

துணை நடிகருக்கான விருது: கிரீன் புக் படத்திற்காக நடிகர் மஹெர்ஷாலா அலிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது: ‘ஸ்பைடர் மேன் – இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்’ படத்திற்காக பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ராட்னி ரோத்மேன், பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது: பாவோ படத்திற்காக டோமி ஷீ, பெக்கி நீமேன்-காப்  ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது: ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் வரும் “ஷேலோ” பாடலுக்காக லேடி ககா, மார்க் ரான்சன், அந்தோணி ரொசாமெண்டோ, ஆண்ட்ரூ வையாட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

சிறந்த திரைக்கதைக்கான விருது: “கிரீன் புக்” படத்திற்காக நிக் வல்லேலொங்கா, பிரியான் கியூரி, பீட்டர் ஃபாரெலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான விருது: “ஸ்கின்” படத்திற்காக கை நேட்டிவ், ஜேமி ரே நியூமேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது: “ஃபர்ஸ்ட் மேன்” படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் உள்ளிட் 4 பேருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி இசைக்கான விருது: “பிளாக் பேந்தர்” படத்திற்காக லுட்விக் கொரான்சன்னுக்கு வழங்கப்பட்டது. வசூலில் சாதனை படைத்த “பிளாக் பேந்தர்” படத்துக்கு ஏற்கனவே, சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என இரு விருதுகளை வென்றுள்ளது. இதுவரை 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது: “பிளாக் கிளான்ஸ்மேன்” படத்திற்காக சார்லி வாச்செல், டேவிட் ராபிநோவிட்ஸ், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது: சிறந்த படமாக “கிரீன் புக்” தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏற்கனவே 2 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3-வது விருதை வென்றுள்ளது.

சிறந்த இயக்குநர் விருது: சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குநர் அல்போன்சோ குவாரன் வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது: தி ஃபேவரைட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஒலிவியா கோல்மேன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான விருது: ‘போகிமியான் ரஃப்சோடி’ என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரமி மாலெக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த பாடலுக்கான விருது: ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் வரும் “ஷேலோ” பாடலுக்காக லேடி ககா, மார்க் ரான்சன், அந்தோணி ரொசாமெண்டோ, ஆண்ட்ரூ வையாட் ஆகியோருக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

Share:

Author: theneeweb