ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.

இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவரை எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திரஜித் ஏற்கனவே தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb