இடமாற்றத்திற்கு இலஞ்சம் பெற்றதாக தேரர் மீது குற்றச்சாட்டு

இலஞ்சம் பெற்று ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்வதாகக் கூறப்படும் பௌத்த தேரர் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சில் இயங்கிய ஆசிரியர் இடமாற்ற சபையில் அங்கத்துவராக இருக்கின்ற குறித்த தேரர் அந்த சபையூடாக வழங்கப்படுகின்ற இடமாற்றங்களை மாற்றியமைக்க இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தேரர் தொழிற்சங்கம் ஒன்றின் பிரதான பதவியை வகிக்கின்றார். இவர் பற்றி விசாரணை நடத்துமாறு கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

10 ஆண்டு சேவையாற்றியவர்களுக்கு இடமாற்றம் வழங்கும் வேலைத்திட்டத்தில் இடமாற்றங்களை மாற்றியமைப்பதற்கும் லஞ்சம் வாங்கியதாக தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb