காணி விடுவிப்பை கோரி கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பம்

பாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பணம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

‘யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றிகொள்வோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

கேப்பாபுலவில் தமது சொந்தநிலம் கோரி இன்று 727 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.

அந்த போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து இன்று காலை பத்து முப்பது அளவில் பயணத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் சென்று உதவி மாவட்ட செயலாளர் செல்வி ஆ.லதுமீராவிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

பின்னர் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான பயணம் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஊடாக கொழும்பு சென்று 2ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb