ஆண் நகர சபை உறுப்பினருக்கு பெண் நகர சபை உறுப்பினர் சீத்தை அணிவித்த அதிர்ச்சி சம்பவம்

கட்டுநாயக்க பிரதேசத்தில் வீதியொன்றை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினையை முன்னிறுத்தி இன்றைய தினம் சீதுவை நகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அந்த வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மக்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் பதற்றநிலையை காணொளியாக பதிவு செய்த மேலும் ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருக்கு அந்த பெண் உறுப்பினர் சிங்களத்தில் சீத்தை என கூறப்படும் உடையை அணிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb