பிரெக்ஸிட் குறித்து மீண்டும் வாக்கெடுப்பு: பிரிட்டன் எதிர்க்கட்சி ஆதரவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது (பிரெக்ஸிட்) குறித்து இரண்டாவது முறையாக பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெரெமி கார்பின் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டைத் தவிர்ப்பதற்காக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட Edit date and timeலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகினாலும், ஐரோப்பிய வர்த்தக யூனியனில் பிரிட்டன் உறுப்பினராகத் தொடர்வதற்கான மசோதாவை எங்களது கட்சி கொண்டு வரும்.

அந்த மசோதா தோல்வியடைந்தால், பிரெக்ஸிட் குறித்து இரண்டாவது முறையாக பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தொழிலாளர் கட்சி ஆதரவு அளிக்கும் என்றார்.
பிரெக்ஸிட்டுக்கான காலக் கெடுவை நீடிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பிரெக்ஸிட் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Share:

Author: theneeweb