வட மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க 11 பாடசாலைகள் புனரமைப்பு

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகள் 31.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் இந்த நிதி வழங்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு வட மாகாண ஆளுநர் இன்றைய தினம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb