இராணுவ வசமுள்ள பொதுமக்கள் காணி­களை கைய­ளிக்கும் வரை அழுத்­தம் கொடுப்­போம்”

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடைந்தது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

 

கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரி­மைக்­கான மக்­கள் இயக்­கம் இணைந்து “வடக்கு பகு­தி­க­ளில் இன்­று­ வரை படை­யி­னர் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­களை மக்­க­ளி­டம் மீளக் கைய­ளிக்க அதி­கா­ரி­க­ளுக்கு அழுத்­தம் கொடுப்­போம் என்­பதை வலி­யு­றுத்­தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்­லைத்­தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்­தன் ஊடாக கிளி­நொச்சியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்­பா­ணத்தை இன்று வந்தடைந்தது. பூந­கரி ஊடாக மன்­னார், வவு­னியா, நீர்­கொ­ழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறும்.

 

எதிர்­வ­ரும் இரண்­டாம் திகதியன்று கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb