தென் மாகாண சபை உறுப்பினர் ரத்தரங் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த 23ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார ரத்தரங் என்று அறியப்படுகிறார்.

Share:

Author: theneeweb