கோட்டாவுக்கு எதிரான வழக்கை நீதவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கான தடை நீடிப்பு

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மீள்பரிசீலனை மனுவின் விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் இந்த தடையுத்தரவு அமுலாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்துள்ளதுடன், அதன் தீர்ப்பு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb