42.3 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் – புதுக்குடியிருப்பு கடற்பரப்பில் படகொன்றில் கடத்தப்பட்ட் 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி கொண்ட போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைதானார்.

அவரிடம் இருந்து 42.3 கிலோகிராம் எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் மன்னார் காவற்துறையில் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், பருத்தித்துறை பகுதியில் நேற்றையதினம் 86.4 கிலோகிராம் எடைகொண்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb