இரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது

கொழும்பில் இடம்பெற்ற கொலையொன்றுடன் தொடர்படைய இரண்டு இலங்கையர்கள், தமிழகம் – ராமநாதரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

தமது உறவினர் ஒருவரை கொலை செய்துவிட்டு சட்டவிரோதமாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த குறித்த இரண்டு பேரும், ராமநாதபுரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த இரண்டு பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இரண்டு பேரும் தற்போது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb