குவைட்டில் இருந்து தாயகம் திரும்பிய 52 வட மாகாண பெண்கள்

குவைட் நாட்டுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 52 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்.

குவைட்டில் இருந்து வந்த விமானமொன்றில் அவர்கள் இலங்கை வந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களுள் 6 பேர் இரண்டு வருடம் பணியாற்றியுள்ள நிலையில் மற்றைய அனைவரும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் குவைட் இராஜ்ஜியத்தில் பணிபுரிந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுப்பணிப்பெண்ணாக பணி புரிந்த வீடுகளின் உரிமையாளர்களால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து , அங்கிருந்து தப்பிச் சென்று குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு சொந்தமான தடுப்பு மத்திய நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் இவ்வாறு தாயகம் வந்தடைந்துள்ளனர்.

இந்த பெண்களில் 8 பேரை தவிர்த்து மீதி 44 பேரும் குவைட்டினால் வழங்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வந்துள்ளனர்.

Share:

Author: theneeweb