நீர்கொழும்பில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா

நீர்கொழும்பில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா

 

 

பண்டிதர் மயில்வாகனனார் அவர்கள் மரபுநெறிதவறாது செந்தமிழால் பாடியுள்ள
ஆயிரக்கணக்கான செய்யுள்கள் தமிழ்த்தாய்க்கு அணிசேர்க்கும்
அணிகலன்களாகும். இப்பாயிரங்கள் இன்று தமிழ்மொழியில் பட்டப்படிப்பை
மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும்
ஆய்வுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பண்டிதர் மயில்வாகனனாரின்
தமிழ்ப்படைப்புக்களை ஆய்வுக் கருவூலங்களாகப் பரிந்துரை செய்கின்றனர்.

இதனைக் கண்ணுற்ற நாம் பெருமகனாரிற்கு நூற்றாண்டு விழா எடுப்பதோடு,
அவரின் படைப்புக்கள் அனைத்தும் எல்லோர் கைகளிற்கும் கிட்டுவதன் மூலம்
எமது அடுத்தடுத்த சந்ததியினர் இவற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்ற
நோக்கத்தோடு, பண்டிதர் ஐயாவின் படைப்புக்கள் அனைத்தும்
இணையவெளியில் இலவசமாக பரவவேண்டும் என்று பேரவாக் கொண்டுள்ளோம்.

இந்தப் பெருமுயற்சியில் அவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள், அவரது
படைப்புக்களை ஆய்வுசெய்து பட்டம் பெற்ற பட்டதாரிகள், அவரோடு
தமிழ்ப்பணியாற்றிய கல்விமான்கள், தமிழின உணர்வாளர்கள் , ஊரவர்கள்,
உறவினர்கள் எனப்பலரும் இணைந்துள்ளோம். இத்தமிழ்ப்பணியில் ஆர்வமுள்ள
அனைவரையும் எம்மோடு இணைந்து பங்களித்துப் பணியாற்ற முன்வருமாறு
அன்போடு அழைக்கின்றோம்.

 

 

Share:

Author: theneeweb