ஒப்பந்தம் இல்லாமலேயே முடிவடைந்தது டிரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே வியத்நாமில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு, ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே முடிவடைந்தது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் டிரம்ப் கூறியதாவது:

“சில நேரங்களில் முடிவுகள் எடுக்காமலேயே பேச்சுவாா்த்தையிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். வட கொரிய அதிபருடனான இந்த இரண்டாவது சந்திப்பும் அந்த வகையைச் சோ்ந்தது ஆகும்.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பேச்சுவாா்த்தையின்போது வட கொரியா வலியுறுத்தியது. அதற்கு நாங்கள் தயாராக இல்லை.

எனவே, எங்களிடையே எந்தவித உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை.

எனினும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல் விவகாரத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடா்ந்து பலனளிக்கும்; எதிா்காலத்தில் சிறந்த தீா்வைத் தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த விவகாரத்தில் வேகமாகச் செயல்படுவதைவிட, விவேகத்துடன் செயல்படவே நான் விரும்புகிறேறன்.

அதிபா் கிம் ஜோங்-உன்னை 3-ஆவது முறையாக நேரில் சந்தித்துப் பேசும் திட்டம் தற்போதைக்கு இல்லை. எனினும், எங்களிடையே ஏற்பட்டுள்ள நல்ல நட்புறவு நீடித்தால் அத்தகைய சந்திப்பு மீண்டும் நடக்கலாம்” என்றாா்.

டிரம்ப்புடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், முன்கூட்டியே முடிவு செய்யப்படாத வெளிநாட்டு செய்தியாளா்களின் கேள்விக்கு வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் முதல் முறையாக பதிலளித்தாா்.

அப்போது, வட கொரிய தலைநகா் பியாங்கியாங்கில் அமெரிக்கா தொடா்பு அலுவலகம் அமைப்பதை வரவேற்பதாக அவா் தெரிவித்தாா்.

அத்தகைய அலுவலகம் அமைக்கப்பட்டால், அமெரிக்கா – வட கொரியா இடையிலான உறறவில் அது முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் இடையே சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாற்றுச் சிறறப்பு மிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றற பிரதேசமாக்குவதற்கும், வட கொரியா மீதான தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருவரும் ஒப்புக் கொண்டனா்.

எனினும், வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் வரையறைகள் குறித்து அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படாததால், அது பெயரளவிலான கூட்டறிக்கையாக மட்டுமே இருப்பதாக பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், டிரம்ப், கிம் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு வியத்நாமின் ஹனோய் நகரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இருவருக்கும் இடையே இறுதி ஒப்பந்தம் ஏற்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டு வந்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவடைந்துள்ளது.

Share:

Author: theneeweb