எதிர்வரும் 4ஆம் திகதி மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, 5ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

எதிர்வரும் 4ஆம் திகதி மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, 5ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

ஆளுநர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5ஆம் திகதி விடுமுறை தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம், குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று வடமாகாண ஆளுநர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb