தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் ஒருமித்து எடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டன.

யாழ்ப்பாணத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபீஆர்எல்எப், புளொட் ஆகிய கட்சிகள் கலந்துக் கொண்டிருந்தன.

இதன்போது, 3 பிரதான விடயங்கள் உள்ளடக்கியதாக மாதிரி வரைபொன்று தயாரிக்கப்பட்டதாக, வடமாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb