பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பெண்கள்

இலங்கையில் 90 சதவீதமான பெண்கள் பேருந்து மற்றும் தொடருந்து முதலான பொதுப் போக்குவரத்து சேவைகளில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்கள் தமது வாழ்நாளி ஒருமுறையேனும் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 4 சதவீதமான பெண்கள் மாத்திரமே இது குறித்து காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்வதாகவும் ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் கொழும்பு மாநாகர சபை என்பன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
”அவள் பாதுகாப்பாக பயணிக்கிறாளா?” என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணவர் நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Author: theneeweb