நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது பொரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.

நெல்லுக்கு உரிய விலையின்மையால், செலவீனங்களை ஈடு செய்யுமளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

சந்தையில் அரிசிக்கான விலையில் வீழ்ச்சி இல்லாத போதிலும், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல் சுமார் 30 ரூபா வரையில் தனியாரினால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

அறுவடை செய்யும் நெல்லினை தனியார் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb