மட்டக்களப்பில்முருகபூபதியின்நூல்கள்அறிமுகம்

படைப்பிலக்கியவதியும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதிஎழுதிய சொல்லவேண்டியகதைகள் மற்றும் சொல்லத்தவறியகதைகள் ஆகிய நூல்களின் அறிமுகவிழாவை மட்டக்களப்பில் எதிர்வரும் 05 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை மாலை4.00மணிக்கு “கா “இலக்கியவட்டமும் “அரங்கம்  “வாரஇதழும் இணைந்து நடத்துகின்றன.

மட்டக்களப்பு- பார்வீதியில் 227ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அரங்கம் கேட்போர்கூடத்தில் அரங்கம் ஆசிரிய ர் திரு. பூபாலரத்தினம் சீவகன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழா, திருமதி ம. விஜயேஸ்வரியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புரவலர்வி. ரஞ்சிதமூர்த்தி பிரதமவிருந்தினராக கலந்துகொள்ளும் இவ்விழாவில் தகைமைசார் பேராசிரியர் செ. யேகராசா,  “சமூககலை இலக்கிய வெளியி ல் முருகபூபதி “ என்ற தலைப்பில்  உரையாற்றுவார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி டிலோஷினி மற்றும் திரு. வி. கௌரிபாலன், செல்விநிலாந்தி சசிக்குமார் ஆகியோர்நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்துவர்.

நூல்களின் ஆசிரியர் முருகபூபதி ஏற்புரையும் திரு. சொ. பிரசாத் நன்றியுரையும் நிகழ்த்துவர்.

கலை,  இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

 

Share:

Author: theneeweb