அபிநந்தன் விடுதலையும்….. அரசியல் சதுரங்கமும்….

.
….கோவை நந்தன்    —

இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய கஷ்மீரின் புல்வாமா தற்கொலை தாக்குதலில் இந்திய காவல் துறையின் மத்திய துணைக் காவல் படையின் 44 வீரர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றதாக சொல்லப்படும் பரஸ்பர விமானத் தாக்குதல்கள் தொடர்பில் பலத்த சந்தேகங்களும் ஊகங்களும் எழுப்பப்படும் நிலையில் பாகிஸ்தானில் கைது செய்யப் பட்டிருந்த இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன் நேற்று மார்ச் 1ம் திகதி விடுதலை செய்யப் பட்டுள்ளார்.
அபிநந்தனை விடுதலை செய்வது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்த முடிவுக்கு உலக நாடுகளின் பாராட்டுகள் அவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன . அவரின் இந்த முடிவு இந்திய-பாகிஸ்தான் போர் ஒன்று மூளும் சூழலை தற்சமயம் அகற்றி அமைதிக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என ஒருசாராரும் இதை இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என மற்றொரு சாராரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதன் பின்னால், சர்வதேச அழுத்தங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் பிரயோகிக்கபட்ட அழுத்தங்களில் எத்தனை ஆத்மார்த்தமாக இருந்திருக்கும் என்பது கேள்வியே.
அபிநந்தன் பிடிபட்ட உடனேயே அவரைப் போர்க் கைதியாக பாகிஸ்தான் இராணவம் அறிவித்திருக்க வேண்டும். இதுதான் சர்வதேச போர்நியதி மட்டுமல்ல போர் தொடர்பான 1949 ஜெனீவா ஒப்பந்ததமும் இதனைத்தான் வலியுறுத்துகிறது.

போர் நடக்கும்போது பிடிபடும் ஒருவரை எதிரி ராணுவத்தினர் கெளரவமாக நடத்த வேண்டும், அவர்களுக்குப் போதிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படக் கூடாது என்கிறது அந்த ஜெனீவா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையொப்பமிட்டிருக்கும் நிலையில், பிடிபட்ட அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக சொலப்படும் விதம,அது உண்மையானால் கண்டனத்துக்கு உரியதே. இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பிரதமர் இம்ரான் கான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அபிநந்தனை விடுவித்தார் என்றும் விமர்சங்கள எழுகின்றன.

அபிநந்தன் பாகிஸ்தானில் நடாத்தபட்ட விதம் குறித்த சில காணொளிகள் மூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்ப பட்டிருந்தன . இந்தக் காணொளிகள் பாகிஸ்தான் இரனுவ தரப்பாலேயே வெளியிடப் பட்டதாகவும் இதனை விருபாத, சர்வதேச அளவில் நற்பெயரை சம்பாதித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிபணியாமல் அரசியல் ரீதியாக முடிவெடுத்துள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.

அபிநந்தனின் விடுதலை தொடர்பான இம்ரான் கானின் அறிவிப்புக்கு பின்னால் பல்வேறு ராஜநந்திர நகர்வுகளும் திரைமறைவில் நடந்துள்ளன. இம்ரான் கானின் அறிவிப்புக்கு ஒரு சில மணிநேரத்துக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா- பாகிஸ்தானில் இருந்து கூடிய விரைவில் நல்ல தகவல்கள் வரவுள்ளன,நாங்கள் மத்தியஸ்தம் செய்து பிரச்சினை தீர்க்க முயல்கிறோம் என அறிவித்தார். அதன் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் அளவிலான தகவல் பரிமாற்றம் பாகிஸ்தானுடன் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்திய அரசின் சார்பிலும் இந்த நாடுகளுடன் கருத்து பரிமாறம் இடம் பெற்றதாகவும் நிபந்தனை ஏதுமின்றி அபிநந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய தரப்பு உறுதி காட்டியதாகவும் சொல்லப் படுகிறது. அமெரிக்காவை தவிர சவுதி அரேபியா,ஐக்கிய அரபு அமீரகம் ஆகியனவும் இந்த விவகாரத்தில் தீர்வு காண பெரும் முயற்சி எடுத்துக் கொண்டன.

இரு நாடுகளுக்கிடையே இதுபோன்று எல்லைப் பிரச்னைகள் ஏற்படுவதும், போர் மூளும் சூழல் உருவாவதும் புதிதான ஒன்றல்ல. ஆனால் இந்த முறை இந்திய ஊடகங்கள் இரு நாடுகளுக் கிடையேயும் போர் மூண்டுவிட்டது போன்ற சூழலை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டு இருந்தது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் இது தொடர்பில் பரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் உணர்வுகளைத் தூண்டும் விதமான அமைந்து மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி இருந்தன. பாகிஸ்தான் உளவுத்துறையின் முகவர்களாக இந்தியாவில் பலர் செயல்படுவது இதன் மூலம் உணர்த்தப் பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும் . தேசபக்தி என்கிற போர்வையில் எதிரி நாடுகளுக்கு எதிரான கருத்துகளையும் கோஷங்களையும் வெளியிடுவது ஆபத்தானது என்பதை பலர் உணர்ந்து கொள்வதில்லை.

இந்திய பாகிஸ்தான் இடையே போர் ஒன்று ஏற்ப்பட்டால் அதுவே இரண்டு நாடுகளுக்கிடையேயான அணுஆயுதப் போராக மாறிவிடும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய-பாகிஸ்தான்,அல்லது இந்திய-சீன யுத்தம் ஏற்படாதா …?என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் பல சக்திகள் மத்தியில் நாம் வாழுகிறோம் என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை.

இதுவரை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரில் மட்டுமே நுழைந்து அங்கே உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பதுடன் தன்னைக் கட்டுப்படுத்தி வந்த . இந்தியா இப்போதுதான் முதன்முறையாக பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதன் மூலம் தேவைப்பட்டால் முழுமையான போருக்கும் தயாராக இருக்கிறோம் என்கிற எச்சரிக்கையை விடுத்திருக்கிறது இந்தியா.

இந்திய மக்களவை தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், குறிப்பாக அமரிக்கா போன்ற மேலைத் தேசங்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் இந்துதுதுவ பிரதமர் எனப்படும் நர்ந்திர மோடியின் அலை சரிந்து வரும் இந்த வேளையில், பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து முதல் தடவை யாக தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்தியா . ஆனால் அதற்க்கு பாரிய அளவில் பாகிஸ்தானின் எதிவினைகள் இடம்பெறவில்லை ,பிடிபட்ட கைதி அபிநந்தனும் நல்லெண்ன அடிப்படையில் விடுவிக்கப் பட்டுள்ளார் என்றால் இதன் பினனால் அரசியல் காய் நகரத்தார்கள் ஏராளம் என்பது தாணே பொருள்

Share:

Author: theneeweb